×

 காந்தியிடம் மன்னிப்பு கேட்கவே ஹேராம் எடுத்தேன்: ராகுல் காந்தியிடம் கமல் உரையாடல்

புதுடெல்லி: காந்தியிடம் மன்னிப்பு கேட்கவே ஹேராம் படம் எடுத்தேன் என ராகுல் காந்தியிடம் கமல்ஹாசன் கூறினார். காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது ராகுலிடம் கமல் கூறியது: எனது இளம் வயதில் காந்தியை பற்றி தவறான புரிதல் இருந்தது. நான் இப்போது காந்திஜியைப் பற்றி அதிகம் பேசுகிறேன். ஆனால், அது ஆரம்பத்தில் அதுபோல் இல்லை. என் தந்தை ஒரு காங்கிரஸ்காரர், ஆனால் நான் என் பதின்பருவத்தில் இருந்தபோது எனது சூழ்நிலை என்னை காந்திஜியை கடுமையாக விமர்சிக்க வைத்தது. என் தந்தை கூறினார், ‘வரலாற்றைப் படி’ என்றார். அவர் ஒரு வழக்கறிஞர், ஆனால், அவர் என்னிடம் இது குறித்து வாதிடவில்லை. பிறகு காந்தியை படிக்க ஆரம்பித்த பிறகு அவரது கொள்கைகளுக்கு நான் பித்தனாகிப் போனேன். அதனால் காந்தியிடம் மன்னிப்பு கேட்க விரும்பித்தான் ஹே ராம் படத்தை இயக்கினேன். அது காந்தியை கொல்ல கோட்சே புறப்படும்போது, இன்னொரு புறத்திலிருந்து இன்னொருவனும் புறப்படுவது போல், பிறகு அவன் தனது தவறுக்கு திருந்துவதுபோல் கதை அமைத்தேன். அது காந்தியிடம் நான் கேட்க விரும்பிய மன்னிப்பு. இவ்வாறு ராகுலிடம் கமல் கூறினார்….

The post  காந்தியிடம் மன்னிப்பு கேட்கவே ஹேராம் எடுத்தேன்: ராகுல் காந்தியிடம் கமல் உரையாடல் appeared first on Dinakaran.

Tags : Heram ,Gandhy ,Kamal ,Rahul Gandhy ,New Delhi ,Kamalhasan ,Rahul Gandhi ,Haram ,Gandhi ,president ,Congress ,
× RELATED சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர்...